Mnadu News

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சிஇஒ நியமனம்

புதிதாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சிஇஒ நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையரக இணை இயக்குனர் பார்த்தீபன் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய சிஇஒ-வாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிளாம்பாக்கத்தில் பயணிகளுக்கு சிக்கல் எதுவும் இன்றி பேருந்துகள் இயக்கப்படுகிறதா? வசதிகள் முறையாக உள்ளதா? என்பது உள்ளிட்ட பணிகளை சி.இ.ஒவாக நியமிக்கப்பட்ட பார்த்தீபன் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More