சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்படக் கண்காட்சியை கமல்ஹாசன் தொடக்கி வைத்தார். ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற பெயரில் முதல்வரின் 70 ஆண்டு பயணம் பற்றி புகைப்படக் கண்காட்சி தொடக்கப்பட்டுள்ளது.புகைப்படக் கண்காட்சியை தொடக்கி வைத்தப்பின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் திமுகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, ஓவ்வொரு காட்சியாகத்தான கதையை நகர்த்த வேண்டும். கிளைமேக்ஸை இப்போதே சொல்லமுடியாது என்று தெரிவித்துள்ளார்.புகைப்படக் கண்காட்சி திறப்பு விழாவுக்கு வருமாறு, கமல்ஹாசனை நேற்று அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று புகைப்படக் கண்காட்சியை கமல்ஹாசன் தொடக்கி வைத்தார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More