2021ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது, உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த, ‘கீதா பிரஸ்’ என்ற பதிப்பகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்திருந்தது.இது குறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கீதா பதிப்பகம், நம் நாட்டின் கலாசாரம், நெறிமுறைகள், ஹிந்து மத நம்பிக்கைகளுடன் தொடர்புடையது. மிகத் தரமான இலக்கிய புத்தகங்களை மிகவும் குறைந்த விலையில், ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் பணியை இந்த பதிப்பகம் செய்து வருகிறது.,இதை விமர்சிப்பவர்கள் யார் என நன்றாகத் தெரியும். முஸ்லிம் லீக்கை, மதச் சார்பற்ற அமைப்பு என கூறியவர்கள் தான், இதை எதிர்க்கின்றனர்; வேறு யாரும் எதிர்க்கவில்லை என்று கூறி உள்ளார். இதற்கிடையே, இந்த விருது மாபெரும் கவுரவம் என தெரிவித்துள்ள கீதா பதிப்பகம், நன்கொடை வாங்குவதில்லை என்ற தங்கள் கொள்கையின் காரணமாக 1 கோடி ரூபாய் பணப்பரிசை ஏற்பதில்லை என அறிவித்துள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More