Mnadu News

குஜராத்தில் ஜேசிபி மூலம் ஆற்றைக் கடக்கும் மக்கள்: இணையத்தில் பரவலாகும் வீடியோ.

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆறுகளில் இரு கரைகளையும் தொட்டுச்செல்லும் வகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ,இந்நிலையில், குஜராத் மாநிலம் குச் பகுதியில் கரைபுரண்டு ஓடும் ஆற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் மக்கள் கடக்கின்றனர். ஆபத்தை உணராமல் ஜேசிபி இயந்திரத்தின் முனைப் பகுதியில் மக்கள் நின்றுகொண்டு மறுகரைக்குச் செல்கின்றனர். இதனை அப்பகுதியைச் சேர்ந்தவர் விடியோ எடுத்துள்ளார். இந்த விடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Share this post with your friends