Mnadu News

குஜராத்தில் மசூதிக்கு ஆக்கிரமிப்பு நோட்டீஸ் : போலீஸார் மீது கல்வீச்சு -ஒருவர் உயிரிழப்பு.

குஜராத்தில் “ஜூன் 14ஆம் தேதி, ஜூனகர்த் மாநகராட்சி சார்பாக, அங்குள்ள மசூதி ஒன்றுக்கு அதன் ஆவணங்களை ஐந்து நாட்களுக்குள், நகராட்சியின் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.இந்த விவகாரம் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலைக்கு வழிவகுத்தது. இந்த நிலையில் நோட்டீஸ{க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 500 -600 பேர் மஜ்வாடி கேட் அருகே கூடினர். அவர்கள் போராட்டம் நடத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்”;.”இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்தததும் போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்துக்கு விரைந்து சென்று அங்கு கூடியிருந்தவர்களுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடங்கள் இந்தப் பேச்சுவார்த்தை நீடித்தது.இந்த சூழலில்,அங்கு கூடியிருந்தவர்கள் போலீஸார் மீது கற்களை வீசத் தொடங்கினர், கோஷமிடத் தொடங்கினர். கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒரு துணை காவல்கண்காணிப்பாளர் உட்பட சில போலீஸார் காயம் அடைந்தனர். பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். இதுவரை 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share this post with your friends