இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு மட்டும் வரும் 12-இல் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையர்கள் இன்று வெளியிட்டுள்ளனர்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் புதிதாக 4 லட்சத்து 60 ஆயிரம்; வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மொத்தம் 51ஆயிரத்து 782 வாக்குச்சாவடிகளில் 4 கோடியே 90 லட்சம் வக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யவுள்ளனர். அனைத்து வாக்குச் சாவடிகளும் தரைத்தளத்தில் அமைக்கப்படும்.
இரண்டு கட்டமாக குஜராத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் மாதம் 1ஆம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ஆம் தேதியும் நடைபெறுகிறது.
தேர்தலுக்கான வாக்கெண்ணிக்கை டிசம்பர் மாதம் 8ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தை தற்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. ஆட்சிக் காலம் அடுத்தாண்டு பிப்ரவரி 18ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More