குஜராத் மாநிலத்தின் பனாஸ்கந்தா பகுதியில் பல்வேறு நலத் திட்டங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது மேடையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் வளர்ச்சிக்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளைப் பட்டியலிட்டுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து மோர்பி பாலம் விபத்துக்குள்ளானது குறித்து பேசத் தொடங்கினார். அப்போது, தளுதளுத்த குரலில் பேசிய மோடி, மேடையின் நின்றபடியே கண் கலங்கினார். பின்னர் பேசுவதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More