மோர்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்து விழுந்தது. அப்போது பாலத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோர் நதிக்குள் விழுந்தனர் இதில், 135 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சி மற்றும் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டு, தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு இன்று துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.இன்று காலை ஆமதாபாத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More