அரபிக்கடலில் 10 நாட்களுக்கு மேலாக நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல், அதிதீவிர சூறாவளியாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால், குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. ஆயிரத்துக்கும்; மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. 600 மரங்கள் வேருடன் சய்ந்தன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. காற்றில் அடித்து செல்லப்பட்டும், மரங்கள் விழுந்தும் பல வீடுகள் சேதமடைந்தன. இந்த நிலையில் பிபர்ஜாய் புயலின் பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம் மாநில முதலமைச்சர் உடன் இணைந்து ஹெலிகாப்டர் மூலம் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மாண்ட்வி சிவில் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்ட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More