Mnadu News

குஜராத் முதல் அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பூபேந்திர படேல்.

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில், 156 இடங்களில் வென்று, பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், குஜராத்தில் தொடர்ந்து 7-ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் 18-ஆவது முதல் அமைச்சராகவும், தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் பூபேந்திர படேல் இன்று பதவியேற்றுக் கொண்டார். காந்திநகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் நிகழ்வில் ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பதவியேற்றனர்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More