Mnadu News

குடி வந்தால் மட்டும் போதும்: 71 லட்சம் நாங்க தருகிறோம் அயர்லாந்து அரசின் அதிரடி அறிவிப்பு.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்து, தன் நாட்டில் வந்து குடியேற விருப்புவோருக்கு இந்திய ரூபாய் மதிப்பு படி, 71 லட்சம் ரூபாய் பணம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து, அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் கூறியிருப்பதாவது: அயர்லாந்து தீவுகளில் மக்கள் தொகையை அதிகரிக்க ஒரு அங்கமாக இந்த திட்டம் அமையும்.இந்தக் கொள்கையின் நோக்கம், பல ஆண்டுகளாக கடல் கடந்த தீவுகளில் தொடர்ந்து வாழ வழிவகை செய்வதோடு மக்களும் செழித்தது வாழ்வதை உறுதி செய்வதாகும். அதோடு, தீவுகளில் தனித்துவமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழல், செழுமை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என நம்பப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை1 முதல் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம். என்று அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Share this post with your friends