திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜ், தன் மகன் தமிழழகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர்.இம்மனு மீது நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில்,மனுதாரர் மகன் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. மாவட்டங்களில் குண்டர் சட்ட நடவடிக்கைக்கு கையெழுத்திடும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கூடுதலாக பணிச்சுமை அதிகரிக்கிறது. எனவே, இந்த அதிகாரத்தை ஐஜி அல்லது காவல் ஆணையர்களுக்கு வழங்கும் வகையில் தேவையான சட்டத் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதா என்பது குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும். என்று தெரிவித்து, விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது” என்று உத்தரவில் கூறியுள்ளனர்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More