திண்டுக்கல் மாவட்டம் பொன்னுமாந்துறை தமிழழகன் தாக்கல் செய்திருந்த மனு கடந்த முறை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது,அப்போது, மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக போலீஸ் ஐ.ஜி.,கள் கைது உத்தரவை பிறப்பிக்க அதிகாரம் வழங்கும் வகையில் குண்டர் சட்டத்தில் திருத்தம் செய்தால் என்ன? இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஜூன் 28 ல் தெளிவுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை மீண்டும் நடைபெற்றது. அச்சமயம் குண்டர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நீதிமன்றத்தில் உள்துறை செயலாளர் அவகாசம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்தது.இதையடுத்து, சட்டத்திருத்தம் மேற்கொள்ள 4 வாரம் அவகாசம் வழங்கி உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் அமர்வு ஒத்திவைத்தது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More