Mnadu News

குமரி விமான நிலையத்துக்கு புதிய இடத்தேர்வு நடக்கிறது: மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் தகவல்.

நெல்லை மாவட்டத்தில் கட்சி மற்றும் அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தரைவழி மற்றும் விமானப் போக்குவரத்து துறை மத்திய இணை அமைச்சர் வி கே சிங் நெல்லை பாஜக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 74 விமான நிலையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளது. புதிய இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. காரைக்குடியிலும் விமான நிலைய அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.சென்னை விமான நிலைய விரிவாக்கம், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், மதுரை விமான நிலைய விரிவாக்கம் போன்றவை நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

Share this post with your friends