“கும்கி” திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன், தம்பி ராமையா, அஷ்வின் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வசூலை பெற்று தந்தது படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான திருப்பதி பிரதர்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஆகிய இரு நிறுவனங்களுக்கும்.
டி இமான்- யுகபாரதி கூட்டணியில் உருவான அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து இவர்கள் கூட்டணியை இந்தியா முழுவதும் பிரபலபடுத்தியது.
கும்கி படத்துக்கு பிறகு டி இமான் மற்றும் யுகபாரதி இருவரும் பயங்கர பிஸியாக தமிழ் சினிமாவில் தற்போது வரை வலம் வருகின்றனர்.
அதே போல இயக்குநர் பிரபு சாலமன் அவர்களுக்கும் இந்த படம் மைனா படத்துக்கு பிறகு பெரும் வெற்றியை அள்ளி கொடுத்தது.
கும்கி படத்தில் சிறந்த நடிப்புக்காக தம்பி ராமையாவுக்கு பல விருதுகள் குவிந்து அவருக்கு அதன் பிறகு வாய்ப்புகள் லைன் கட்டி நின்றன.
ஆனால், இயக்குநர் பிரபு சாலமன் கும்கி படத்துக்கு பிறகு அதே போன்ற வெற்றியை பதிவு செய்ய தடுமாறி வருகிறார்.
கும்கி 2 துவங்கப்பட்டு உருவாகி வரும் நிலையில், மீண்டும் அவருக்கு நல்ல பாதையை இது அமைத்து தரும் என நம்பலாம்.