Mnadu News

குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் தமிழ்நாட்டில் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததன் காரணமாக பல்வேறு குளறுபடிகளுடன் தாமாதமாக தொடங்கியுள்ளன. இதனால் பல முறைகேடுகள் நடந்துள்ளது, அதன் காரணமாக தகுதிவாய்ந்த தேர்வர்கள் தங்கள் வாய்ப்பினை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி தேர்வு போன்ற முக்கிய தேர்வுகளையே முறையாக கையாளத் தெரியாத இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசை வன்மையாக கண்டிப்பதுடன், உடனடியாக கடந்த 25 ஆம் தேதி நடைப்பெற்ற தேர்வை ரத்துசெய்து, வேறு ஒருநாளில், உரிய முறையில் மறுதேர்வினை நடத்திட வேண்டும் என இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன். என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this post with your friends