பாஜக எம்எல்ஏ மதல் விருப்பாக்சப்பாவின் மகன் பிரசாந்த். இவரது வீட்டில் வியாழக்கிழமை லோக் ஆயுக்த அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.சுமார் ரூ.6 கோடி ரொக்கம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் பிரசாந்த் மாதலையும் கைது செய்தனர். இச்சம்பவம் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியதாது, லோக்ஆயுக்த சுதந்திரமானது, குற்றவாளிகளை தண்டிப்பதே எங்கள் நோக்கம்.அனைத்து விவரங்களும் லோக் ஆயுக்தவிடம் உள்ளன, அது யாருடைய பணம், அது எங்கிருந்து வருகிறது, எல்லாம் வெளியே வர வேண்டும். என்று அவர் குறிப்பிட்டார்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More