இந்த ஆண்டு சார்தாம் யாத்திரை கடந்த மே மாதம் 3ஆம் தேதி அக்ஷய திரிதியை அன்று தொடங்கியது. அதையடுத்து கேதார்நாத் கோயில் கடந்த மே மாதம் 6ஆம் தேதி திறக்கப்பட்டது.
பாரம்பரியமாக, சார்தாம் கோயிலின் சன்னதிகள் குளிர்காலத்தில் ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படும். இந்நிலையில் கருவறையின் கதவுகள் மூடப்பட்ட பிறகு, கேதார்நாத்தின் பஞ்சமுகி விக்ரஹ உற்சவ் பல்லாக்கு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. காலை சரியாக 8.30 மணிக்கு, திரண்டிருந்த பக்தர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் கேதார்நாத் சிவனின் பல்லக்கு மண்டபத்திலிருந்து கோயில் வளாகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து, கேதார்நாத் கோயிலின் நடை சாத்தப்பட்டது. பின்னர், அங்கிருந்த சிவன் சிலை உகிமாத் நகரில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோயிலில் வைக்கப்பட்டு நாளை முதல் வழிபாடு நடத்தப்படும்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More