குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜு, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘நானும் கணவர் ஆனந்த்தும் பிரிந்து வாழ்கிறோம். என் இரு குழந்தைகளையும் கணவர் கடத்தி வைத்துள்ளார். என் மகன், மகளை மீட்டு ஆஜர்படுத்தி என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ். ஸ்ரீPமதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், கணவன், மனைவி பிரச்சினையில் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டதை ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க முடியாது. சம்பந்தப்பட்ட குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடிக்கொள்ளலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More