Mnadu News

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.3 லட்சம்: ஜப்பான் அறிவிப்பு.

ஜப்பானில் மக்கள் தொகைப் பெருக்கத்தை அதிகரிக்க அந்நாடு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து வருகிறது. தென்கொரியாவைப் போன்று ஜப்பானிலும் குழந்தைப் பெற்றுக்கொள்வதில் அந்நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதில்லை. இதனால், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் ஜப்பான் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு கூடுதலாக 42ஆயிரம் ரூபாய் வழங்க அந்நாட்டு சுகாதாரம் மற்றும் தொழிலாளர் நலத் துறை முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே குழந்தை பிறந்த பிறகு, தம்பதிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2,52,000 (4,20,000 யென்) வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் 2023ஆம் நிதியாண்டு முதல் அமல்படுத்தவும் ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளது. ஜப்பானில் பொருளாதார பற்றாக்குறை, உறுதித்தன்மையற்ற வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றால் குழந்தை பெற்றுக்கொள்வதில் அந்நாட்டு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More