மத்திய அமெரிக்க நாடான குவாதமாலாவிலும், இந்தியாவிலும் ஏலக்காய் அதிகளவில் சாகுபடியாகிறது. பராமரிப்பு செலவு இன்றி மானாவாரி நிலத்தில் குவாதமாலாவில் ஏலக்காய் விளைகிறது.இந்நிலையில், நடப்பாண்டில் குவாதமாலாவில் 45 ஆயிரம் டன் மகசூல் எடுக்கப்பட்டுள்ளது.இதனால் குவாதமாலா விவசாயிகள் விலையை குறைத்து,இருப்பை காலி செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே இந்தியாவை சேர்ந்தவர்கள் பெரிய அளவில் கொள்முதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால்,ஸ்பைசஸ் வாரியம் இந்திய ஏலக்காயுடன் குவாதமாலா ஏலக்காயை கலந்து ஏல மையங்களின் விற்பனை செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More