ஏ ஜி எஸ் நிறுவனத்தின் சிறு பட்ஜெட் தயாரிப்பில் ( ₹5 கோடி) முதலீட்டில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் வசூலை வாரிக் குவித்தது லவ் டுடே. இதனால் இயக்குநர் நடிகர் பிரதீப் அவர்களுக்கு ஆஃபர் மேல் ஆஃபர் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், தன்னை நம்பி தந்த ஏ ஜி எஸ் நிறுவனத்துக்கு தான் தமது அடுத்த இரண்டு படங்களும் என கூறி வருகிறாராம், அதோடு அகிரீட்மெண்ட் போட்டு விட்டாராம். இந்த நிலையில், இதற்கு அடுத்து லைக்கா உடன் நான்கு படங்களும், ஸ்டுடியோ கிரீன் உடன் ஒரு படமும், ராக் ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் உடன் ஒரு படத்தை கமிட் செய்துள்ளார் என தெரிகிறது. இதில் லைக்காவுக்கு மட்டும் வெறும் வார்த்தை கூறி உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

தமது அடுத்த இரண்டு படங்கள் மாபெரும் வெற்றி பெற்றால் பிரதீப் சம்பளம் ₹20 கோடிகள் கூட தொடலாம் என சொல்லப்படுகிறது.