சென்னை உயர்நீதிமன்றத்தில்; கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகியோர் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க, கடந்த மாதம் கொலீஜியம் பரிந்துரை செய்தது. இதனை தொடர்ந்து, கூடுதல் நீதிபதிகளான 5 பேரையும் கடந்த வாரம் நிரந்தர நீதிபதிகளாக குயெரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்தார். இந்த நிலையில், இந்த 5 நீதிபதிகளும் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவியேற்றுக்கொண்டனர். பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா 5 பேருக்கும் நிரந்தர நீதிபதிகளாக பதவிபிரமாணம் செய்துவைத்தார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More