Mnadu News

கூட்டணிக்கு வரவில்லை என்றால் “டோன்ட் கேர்” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் டோன்ட் கேர். மோடி வருகையால் எந்தவித மாற்றமும் தாக்கமும் ஏற்படப் போவதில்லை.

அ.தி.மு.க. போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் இருப்பேன் என தெரிவித்த கருத்து குறித்து கேட்டனர். அதற்கு அவர் யாரையும் கெஞ்ச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, எங்களுக்கான தனித்தன்மை இருக்கு. அதற்கான அடையாளம் இருக்கிறது. அதிமுக தனியாக நின்று கூட சாதனை படைத்திருக்கிறது என்றார்.

கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் டோன்ட் கேர். அவர்கள் வந்தால் அவர்களுக்கு தான் அதிக இடம் கிடைக்கும். திமுகவில் ஒரு இடம் கிடைக்க போவதில்லை என்று விமர்சனம் செய்தார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More