சென்னை: நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட பின்னர் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி பற்றிய பா.ம.க.வின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். கவர்னரும், தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டும். பிரச்சனைகள் எழுவது தமிழக மக்களுக்குத் தான் பாதிப்பாக அமையும்.
கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் மிகப்பெரிய அளவில் பூங்கா அமைக்க வேண்டும். பூங்காவை தவிர வேறு எதுவும் அமைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம். சென்னையில் 870 பூங்காக்கள் உள்ளன. அதில் பெரும்பாலான பூங்காக்கள் 1 முதல் 2 ஏக்கர் பரப்பளவில் தான் உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையம் 66 ஏக்கர் பரப்பளவு கொண்டது. எனவே அதில் பிரமாண்டமான பொழுது போக்கு பூங்காவை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.