Mnadu News

கூட்டணி தர்மத்தை யாரும் சொல்லித்தர வேண்டாம்: அண்ணாமலை சாடல்.

அதிமுக குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் கே. அண்ணாமலை, என் நேர்காணலை சரிவர புரிந்துகொள்ளாமல் அதிமுகவினர் எனக்கு எதிராக கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.மோடியின் அரசியல் நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவன் நான். எனது மனசாட்சிப்படி தமிழகத்தில் நான் அரசியல் செய்து வந்துள்ளேன். தமிழகத்தில் நேர்மையாகவும், மக்கள் நலனுக்காகவும் அரசியலை முன்னெடுத்துச்செல்ல விரும்புகிறேன்.தமிழகத்தின் எதிர்காலம் குறித்த எனது கனவு கொள்கைகளை அடமானம் வைக்க விரும்பவில்லை. கூட்டணிக் கட்சியையும் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் வழிநடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை. கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக கூட்டணிக் கட்சி விரும்புவதை எல்லாம் கூற முடியாது.கூட்டணி கட்சிகள் எதிர்பார்ப்பதை நாங்களும் கூற வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றது. தலைமை செயலகத்தில் புலனாய்வு அமைப்புகள் சோதனை நடத்தி வருவது இது முதல்முறையல்ல என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More