கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்த பின்னர், டிஜிட்டல் அறிவியல் பூங்கா மற்றும் கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டங்களை துவக்கி வைத்து பேசியுள்ள அவர், வலிமையான மத்திய அரசால், இந்தியா மீதான நம்பிக்கைக்கு உற்சாகம் கிடைக்கிறது.அதனால், இந்தியாவை பிரகாசமான இடத்தில் உள்ளதாக, உலக நாடுகள் பார்க்கின்றன.அதே சமயம், கூட்டாட்சி தத்துவத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.அதாவது, கேரளா வளர்ச்சியடைந்தால், இந்தியா வேகமாக வளர்ச்சி பெறும்.அதன் அடிப்படையில் பார்க்கும் போது, கேரளாவிற்கு முதல் வந்தே பாரத் ரயில்சேவைகிடைத்துள்ளது.அதோடு, கொச்சிக்கும் வாட்டர் மெட்ரோ திட்டமும் கிடைத்துள்ளது. பல்வேறு வகையான வளர்ச்சி திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன என்று பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், கேரள பாரம்பரிய உடையணிந்து பிரதமர் பங்கேற்றார். அம்மாநில பாரம்பரிய வேஷ்டி, சட்டை மற்றும் துண்டு அணிந்திருந்தார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More