உறுப்பினர் பட்டியலில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும் வரை தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்; வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உறுப்பினர் பட்டியல் திருத்த பணிகள் நடந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதோடு,குறைகளை நிவர்த்தி செய்ய அரசு 6 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளதாக, கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை ஏற்று வாக்காளர் பட்டியலை திருத்த அவகாசம் வழங்கி, கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More