Mnadu News

கூட்டுறவு துறையில் மறுசீரமைப்பு அவசியம்: மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து.

மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் புனேயில் சிவாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட தீம் பார்க்கான சிவஸ்ருஷ்டியின் முதல் கட்ட திறப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சியில் அமித்ஷா கூறுகையில், சிவஸ்ருஷ்டி தீம் பார்க் துவங்குவதற்கு இதைவிட சிறந்த நாள் இருக்க முடியாது. நாட்டிற்காக சிவாஜி மகாராஜி அளித்த பங்களிப்பிற்காக அவரை வணங்குகிறேன் எனக் கூறினார்.இதற்கிடையே, புனேயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை குறைந்து தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூட்டுறவு துறையில் மறுசீரமைப்பு அவசியம்.நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டது.கூட்டுறவு சங்கங்கள் மூலம் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய நிதியை வழங்குவதற்கான இலக்கை அடைய, நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்களை அமைக்க வேண்டும். இதையடுத்து கூட்டுறவுத் துறையின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. என்று பேசினார்.

Share this post with your friends