டெல்லி முதல் அமைச்சர்; கெஜ்ரிவால், தனக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட வீட்டை புதுப்பித்ததில் முறைகேடு செய்ததாக காங்கிரஸ், பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தின. ஆனால் இதனை கெஜ்ரிவால் மறுத்தார்.இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு துணைநிலை ஆளுநர் அறிக்கை அனுப்பி இருந்தார். அதில், புனரமைப்பு பணிகளில் நிதி முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதாக கூறியிருந்தார்.இதனையடுத்து, புதுப்பிப்பு பணி குறித்து சிறப்பு சிஏஜி மூலம் ஆய்வு நடத்தும்படி உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக, முதல் அமைச்சர்; அலுவலகம் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இதுவரை பதில் அளிக்கவில்லை.

தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பேட்டி
தென்காசி மாவட்டம் குண்டாறு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்...
Read More