உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பிரபல கேதார்நாத் புனித தலம் அமைந்துள்ளது. இந்த சிவன் கோவிலுக்கு புனித யாத்திரை துவங்கி நடைபெற்று வந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக மே 15 வரை, பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சமோலி மற்றும் ருத்ரபிரயாக் மாவட்டங்களில், மீண்டும் கடும் பனிப்பொழிவு இருப்பதால், கேதார்நாத் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.அதன்படி, கேதார்நாத்தில் மீண்டும் கடும் பனிப்பொழிவு இருக்கிறது. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் வானிலை நிலவரத்தை அறிந்து தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். பக்தர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியமானது. என்று தெரிவித்துள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More