Mnadu News

கேதார்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு மே 8 வரை நிறுத்தம்.

உத்தரகண்டின் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரை மக்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், கேதார்நாத்தில் அடுத்த 3 அல்லது 4 நாள்கள் மோசமான வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக யாத்திரைக்கான முன்பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.,சுற்றுலாத் துறையின் தகவலின்படி,,மே 10ஆம் தேதி வரை யாத்திரைக்கு ஏற்கனவே 1லட்சத்து 26 ஆயிரம் பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கேதார்நாத்தில் தற்போது மோசமான வானிலை நிலவி வருவதால் முன்பதிவு செய்வது மே 8-ஆம் தேதி வரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Share this post with your friends