தனுஷ் என்னும் நடிப்பு ராட்சசன் ஒரு இயக்குனரை தேர்வு செய்து அவருடன் பயணிக்க துவங்கினால் அந்த படம் நிச்சயம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் அது மிகையாகாது.

ராக்கி, சாணிக் காயிதம் படங்களுக்கு பிறகு மீண்டும் அருண் மாதேஸ்வரன் தன்னுடைய தனித்துவ இயக்கத்தில், ஜி வி பிரகாஷ் குமார் இசையில் தனுஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் “கேப்டன் மில்லர்”. 1980 களில் நிகழும் கதைக்களம் போன்று இப்படம் உருவாகி வருகிறது.

ஏற்கனவே, இப்படத்தின் பிரி பிசினஸ் 80 கோடிகளை பெற்று உள்ள நிலையில், தற்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களின் வரிசையில் தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படம் உள்ளது.

இந்த நிலையில், “கேப்டன் மில்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 30 அன்று வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்தது. இதனால் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தை துவக்கி உள்ளனர்.
