பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வருகை தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் மா, கொய்யா, பலா உள்ளிட்ட பழங்களை டன் கணக்கில் வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர்.தற்போது,சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் பாலக்காடு, ஆலப்புழா, கொச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து பழநிக்கு பலாப்பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகின்றன. வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து, ஒரு கிலோ 20-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவு என்பதால் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். இதனால் விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

திடீரென ஆற்றில் கவிழ்ந்த அமைச்சர் பயணித்த படகு: பதறிப்போன அதிகாரிகள்.
தெலங்கானா மாநிலம் அமைந்து பத்து ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், மாநிலத்தின் பத்தாம்...
Read More