நாட்டின் 15 வது வந்தே பாரத் ரயிலானது திருவனந்தபுரம் – காசக்கோடு இடையே தன் சேவையைத் துவங்கியது. இதுதான் கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் என்பதால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தொடக்கத்திலிருந்தே இந்த ரயிலில் மக்கள் ஆர்வத்துடன் பயணித்து வருகின்றனர்.இந்நிலையில் திருநாவாய் – திரூர் இடையே இந்த ரயில் இயக்கப்பட்டபோது, அதன் மீது யாரோ கற்களை வீசினர் . இதில் வந்தே பாரத் ரயிலின் சி4 பெட்டியின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை.பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கல்வீசிய நபர்கள் யார் என்று தேடி வருகின்றனர்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More