Mnadu News

கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

திருவனந்தபுரம்-காசர்கோடு இடையேயான 586 கிலோ மீட்டர் தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கும் வந்தே பாரத் ரயிலில் செல்லும் மாணவர்களுடனும், பயணிகளுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பின்னர், மாணவர்கள் வரைந்த ஓவியங்களை மோடியிடம் காண்பித்து மகிழ்ந்தனர்.அதையடுத்து வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.இந்த நிகழ்வை நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்புற நடைமேடையில் இருந்து கண்டு மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல் அமைச்சர்; பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this post with your friends