Mnadu News

கேரளாவில் வீட்டில் மாந்திரீகம் செய்தது கண்டுபிடிப்பு; போலீசார் விசாரணை;

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள யூதகிரியை சேர்ந்த ராபின் என்பவரது வீட்டில் மாந்திரீக பூஜை நடப்பதாகவும், அப்போது கோழி ஆடு போன்றவைகள் பலி கொடுக்கப்படுவதாகவும் அப்பகுதியை சேர்ந்த ஷிஜு தெரிவித்தார். மேலும் இதுகுறித்து ஷிஜி அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு ஹோமம் குண்டங்கள், யாகத்திற்கு பயன்படுத்தப்படும் கத்திகள், பூஜை உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் இதுகுறித்து ராபினிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends