லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான “கைதி” திரைப்படம் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மெகா ஹிட் அடித்தது.

இந்த படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் இந்தியாவெங்கும் பிரபல இயக்குனராக உருவானார். விமர்சன மற்றும் வசூல் ரீதியாக இப்படம் பெரும் வரவேற்பு பெற்றது.

தற்போது இப்படத்தை “போலா” என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது இதில் அஜய் தேவ்கன் லீட் ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஏற்கனவே நடிகை தபு நடித்து வந்த நிலையில், தற்போது அமலா பால் இந்த படத்தில் இணைந்துள்ளார். டிரீம் வாரியர் நிறுவனத்தோடு இணைந்து அஜய் தேவ்கன் நிறுவனம் தயாரிக்கிறது.
