பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, இராஷி கண்ணா, லைலா, சரத் ரவி, மூனிஸ்கந்த் ஆகியோர் நடிப்பில் சென்ற வாரம் வெளியான திரைப்படம் “சர்தார்”. கார்த்தி டூயல் ரோலில் கலக்கி இருந்தார். ஜி வி பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசை அமைத்து உள்ளார்.
தீபாவளி விருந்தாக 300 திரை அரங்குகளில் வெளியான சர்தார் இதுவரை 70 கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்த படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு திரை அரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்பொழுது இந்த படத்துக்கு 600 திரை அரங்குகள் ஒதுக்கப் பட்டுள்ளன.
சர்தார் உடன் வெளியான பிரின்ஸ் திரைப்படம் ஏகபோக எதிர்பார்ப்பை கிளப்பி வெளியான நிலையில் வெறும் 30 கோடிகளை மட்டும் தற்போது வரை வசூல் செய்து உள்ளது. அதே நேரத்தில் பிரின்ஸ் திரைப்படத்தை பல திரை அரங்குகள் நீக்கி அதற்கு பதிலாக சர்தார் படத்துக்கு அதிக ஸ்கிரீன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.
அதோடு, இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் வெளியாக போவதில்லை என்பதால் சர்தார் நிச்சயம் 100 கோடிகள் வசூலை தொட்டு விடும் என திரை அரங்கு உரிமையாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இதன் மூலம் தீபாவளி ரேஸில் சர்தார் தான் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.