திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கொடைக்கானல் நீரோடைப் பகுதிகளான வெள்ளிநீர் அருவி,பள்ளங்கி அருவி போன்றவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான மன்னவனூர்,பூம்பாறை,கூக்கால்,கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்ததால் கூககால் ஊராட்சி மூங்கில்காடு செல்லும் பகுதியிலுள்ள பெரிய ஓடைப் பகுதியில் தண்ணீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அப்பகுதியிலுள்ள பொது மக்கள் கயிறு கட்டி அதன் மூலம் ஆற்றைக் கடந்து செல்கின்றனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலத்துரை,கணேசபுரம்,பெருங்காடு,மூங்கில் காடு ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த 100−க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More