கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை பல்கலைக் கழக துணை வேந்தர் கலா, பதிவாளர் ஷீலா பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.பின்னர்,பழங்குடி மக்கள் பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்து வரவேற்பு அளித்தனர். பழங்குடி மக்களின் வீடு போல் அமைக்கப்பட்டிருந்த குடிலுக்குள் சென்று ஆளுநர் பார்வையிட்டார். அப்போது பழங்குடி மக்கள் உண்டு உறைவிடப் பள்ளி அமைத்து தர வேண்டும் உட்பட 3 அம்ச கோரிக்கைகளை ஆளுநரிடம் வைத்தனர்.அதையடுத்து,பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த அன்னை தெரசா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என். ரவி, பின் பல்கலைக் கழக நிர்வாகம், கல்வி சார்ந்த செயல்பாடுகள், வழக்கமான பணிகள், தேர்வு முடிவுகள், மாணவர்களின் வேலை வாய்ப்புகள் தொடர்பாக பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார். பல்கலை வளாகத்தில் முதுகலை இயற்பியல் துறை ஆய்வகத்தை திறந்து வைத்து, காந்தி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். இதையடுத்து, பல்கலை மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More