இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பந்தா சௌக் பகுதியில் ராகுல் காந்தி தேசியக் கொடி ஏற்றினார்.நடைப்பயணத்தில் பங்கேற்ற பலர் முன்னிலையில், நடைப்பயணம் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தேசியக் கொடி ஏற்றிவைத்துப் பேசிய ராகுல் காந்தி, செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி கடந்த 136 நாள்களாக, தனது நடைப்பயணத்தின் போது தங்களது அன்பையும் ஆதரவையும் அளித்தவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.நிகழ்ச்சி நிறைவுபெற்றதும், நடைப்பயணத்தில் தன்னுடன் இணைந்து கொண்ட சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவுடன் அவர் பனிக்கட்டிகளை வீசி எறிந்து செல்ல சண்டையில் ஈடுபட்டார்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More