Mnadu News

கொண்டைகடலையில் ஒளிந்துள்ள பயன்கள் இவ்வளவா?

வாழ்க்கை:

பரபரப்பான வாழ்க்கை சூழலில் இன்று பெரும்பாலானோர் பசி என்பதை தாண்டி ருசிக்கு மட்டுமே சாப்பிடுகிறோம். ஆனால், உடல் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இப்படி இருக்க நாம் நமது உடலை பேணிக் காக்க வேண்டிய நிலை உள்ளது. சிறு வயது மரணங்கள் மற்றும் வியாதிகளை தடுக்க ஒரு நல்ல உணவு வகை எதுவென்றால் அது முளை கட்டிய பயிர், ஆம் உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்ள இதுவே சிறந்த உணவு.

பயன்கள் என்னென்ன:

*கொண்டக்கடலையில் நார்ச்சத்து நிறைய உள்ளதாலும், கலோரி சத்து குறைவாக உள்ளதாலும் உடலில் தேவையற்ற பேட்களை கரைக்க விரும்பும் நபர்களுக்கு இது சரியான உணவாக அமையும்.

*சிவப்பு கொண்டக்கடலையில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் எண்ணற்ற ஃபைடோ ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், அவை உங்கள் ரத்த நாளங்களின் நலமை மேம்படுத்தும் மற்றும் ஸ்ட்ரெஸ் அளவை குறைக்கும். இதனால், இதய நோய்க்கான அபாயம் குறையும்.

*முளை கட்டிய கொண்டக்கடலையில் அத்தியாவசிய விட்டமின்களான விட்டமின் ஏ, விட்டமின் பி16 மற்றும் ஜிங்க், மேங்கனீஸ் போன்ற தாதுக்கள் அதிகளவில் உள்ளன. இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு துணை நிற்பதோடு, முடி வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றும்.

*பொதுவாகவே நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் தன்மை கொண்டக்கடலைக்கு உண்டு. அதனால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். எனவே மெமரி பவர் அதிகரிக்கும் என்பதால் குழந்தைகளுக்கு இதை தினசரி மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ்ஸாக கொடுக்கலாம்.

*முளைகட்டிய கொண்டக்கடலையில் கரையத்தக்க நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமான நடவடிக்கையை மேம்படுத்தும் மற்றும் குடல் நலனை காக்கும். மேலும், சர்க்கரை அளவும் உடனடியாக அதிகரிக்காது என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த உணவாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More