உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று பல லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்களை பறித்தது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து பலரும் வேதனையடைந்தனர். இந்நிலையில், டெல்லியில் சுகாதாரப் பணியில் ஈடுபட்டு பல உயிர்களை காப்பாற்றிய இரண்டு மருத்துவர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆம் ஆத்மி அரசு தலா ஒரு கோடி நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி, கொரோனாவில் உயிரிழந்த மருத்துவர்களான ரமேஷ் குமார் மற்றும் மருத்துவர் சஞ்சய் குமார் ஆகியோரின் குடும்பத்தினரைச் சந்தித்து டெல்லி அமைச்சரவை அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் தலா ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.அதோடு,உயிhழந்த மருத்துவர்களின் குடும்பங்களை ஆம் ஆத்மி கவனித்துக்கொள்வதாக உறுதி அளித்ததாக கேஜரிவால் டிவிட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More