யார் இந்த கோகுல்?
ரௌத்திரம்,இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா, அன்பிற்கினியாள் ஆகிய முற்றிலும் மாறுபட்ட கதைக்களங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் கோகுல்.

தனி பாணி:
ஒவ்வொரு படத்துக்கும் இடைவெளி மட்டும் இன்றி, கதையிலும் புதுமை புகுத்துவதில் கை தேர்ந்தவர் கோகுல். இவர் இந்த மாதிரி படங்களை கொடுப்பதில் சரியான இயக்குநர் என்பது இல்லாமல் தனக்கென தனி பாணியை உருவாக்கி அதில் வலம் வருபவர் இவர்.

கொரோனா குமார் பட சர்ச்சை :
சிம்புவை வைத்து மூன்று வருடங்களுக்கு முன் கொரோனா குமார் என்கிற படத்தை இயக்கி போவதாக அவர் அறிவித்தார். ஆனால், சில காரணங்களால் அந்த கூட்டணி ஷூட்டிங் செல்லவில்லை. எனவே படம் ட்ராப் என அனைவரும் கிசு கிசுத்து வந்த நிலையில், தற்போது அவர் அதிரடி அப்டேட் ஒன்றை கொடுத்து உள்ளார். கொரோனா குமார் படம் நிச்சயம் உருவாகும் ஆனால் அதில் வேறு ஒரு ஹீரோ நடிப்பார் என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.
