கொரோனா பரவல்:
2019 ஆம் இறுதியில் சீனாவில் துவங்கிய கொரோனா தொற்று, 2020 ஆம் ஆண்டு இந்தியா போன்ற உலக நாடுகளில் பரவி உலகையே ஸ்தம்பிக்க வைத்தது.
இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. பல உலக நாடுகளில் லட்சக்கணக்கானோரின் உயிரை கொரோனா பறித்ததோடு பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தினசரி கொரோனா பெருந்தொற்று குறித்த அறிக்கையை மத்திய சுகாதார மையம் வெளியிட்டு வருகிறது.

உலக கொரோனா நிலவரம்:
உலகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 கோடியே 4 லட்சத்து 22 ஆயிரத்து 349 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 6 லட்சத்து 23 ஆயிரத்து 765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 66 கோடியே 29 லட்சத்து 6 ஆயிரத்து 466 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 68 லட்சத்து 92 ஆயிரத்து 118 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.