Mnadu News

கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் உருவானதற்தான ஆதாரம் இல்லை: அமெரிக்கா அறிக்கை.

கொரோனா வைரஸ் தொடர்பாக அமெரிக்காவின் தேசியப் புலனாய்வு இயக்குநராக அலுவலகம் நான்கு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,மத்திய புலனாய்வு முகமை மற்றும் மற்றொரு நிறுவனத்தால் கோவிட் 19 தொற்று எங்கிருந்து பரவியது என்பதை இன்னும் தீர்மானிக்க முடியவில்லை. ஏனென்றால் இயற்கை மற்றும் ஆய்வகம் ஆகியவை இரண்டு குறிப்பிடத்தக்க அனுமானங்களைக் கொண்டிருக்கிறது அல்லது முரணான அறிக்கைகளினால் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.வூஹான் ஆய்வகங்களில் கோவிட் வைரஸ் பற்றி விரிவான ஆய்வு வேலைகள் செய்யப்பட்டாலும், தொற்று அங்கிருந்து உருவானது என்பதற்கான எந்த வித ஆதாரத்தையும் அமெரிக்க புலனாய்வு நிறுவனம் கண்டறியவில்லை. அதோடு, வூஹான் ஆய்வு மையத்தின் ஊழியர்களிடம் அது தொடர்பான சம்பவம் குறித்து ஆய்வு நடந்ததற்கான நேரடி ஆதாரம் எதுவும் இல்லை. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends