Mnadu News

கொலை படத்தின் ரீலீஸ் எப்போ தெரியுமா?வெளியான மாஸ் அப்டேட்!

நடிகர் விஜய் ஆன்டனி நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டை நடத்திய திரைப்படம் பிச்சைக்காரன் 2. வழக்கமாகவே அவரின் கதை தேர்வுகள் மிகவும் வலுவாக இருக்கும். அதை உணர்த்துகிறது அவரின் அடுத்தடுத்து வரும் படங்கள். ஆம், விஜய் ஆன்டனி நடிப்பில் இன்னும் 5 படங்களுக்கு மேல் வர உள்ளது. மற்ற பெரிய நடிகர்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார் இவர். 

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அவரின் நடிப்பில் வெளியாக உள்ளது “கொலை”. பாலாஜிகுமார் இயக்கத்தில் ரித்திகா சிங் மற்றும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய் ஆண்டனி, டிடெக்டிவ் ரோலில் வாழ்ந்து உள்ளார். க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு க்ரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் டிரெய்லர் கடந்த ஆண்டே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், கொலை படத்தின் ரீலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது அதன்படி வரும் 21 ஜூலை இப்படம் வெளியாகும் என தமது டிவிட்டர் பக்கத்தில் விஜய் ஆன்டனி அறிவித்து உள்ளார்.

Share this post with your friends