கேரளம் மாநிலம் கொல்ல உளிய கோயில் பகுதியில் மருந்து சேவை கழகத்தின் கீழ் மருந்து சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் மருந்து பொருள்கள் மட்டுமின்றி மருந்து பொருள்கள் தயார் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயன பொருள்களும் பாதுகாத்து வைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த மருந்து சேமிப்பு கிடங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென சேமிப்பு கிடங்கு முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த தீபத்தில் கிடங்கில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து பொருள்கள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையின்ர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More