கோக் ஸ்டுடியோ தமிழ்:
பல நல்ல தமிழ் கலைஞர்களை வெளிக் கொண்டு வரும் விதமாக தமிழில் உருவாகி உள்ளது கோக் ஸ்டுடியோ தமிழ். அப்படி முதல் முயற்சியாக கதிஜா ரஹ்மான், அறிவு கூட்டணியில் “சகவாசி” என்கிற பாடல் வெளியாகி ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். ஷான் ரால்டன் இசையில் , அறிவு இப்பாடலை எழுதி உள்ளார். இயற்கையும், மனிதனும் ஒன்று என்கிற ஒரு வரியை பாடலாக ராப் கலந்து கொடுத்து அசத்தி உள்ளது இந்த இளம் குழு.
சாங் லிங்க்: https://youtu.be/Vb6pyPmbJrw

வைரலான என்ஜாய் எஞ்சமி :
2021 இல் தீ, அறிவு கூட்டணியில் வெளியாகி உலக அளவில் அனைவரையும் கட்டி போட்டது என்ஜாய் எஞ்சாமி பாடல். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட வைத்து சிந்திக்க வைத்து ஒரு பெரிய அதிர்வை விட்டு சென்றது இந்த பாடல். இதன் பிறகு மீண்டும் அறிவு சமூகம் சார்ந்த பாடலை கொடுத்து அனைவரையும் கவர்ந்து உள்ளார்.
